News August 19, 2024

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் சென்றவர்கள் இன்று திரும்பி கொண்டிருக்கின்றனர். இதனால், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. கார்கள், பேருந்துகள் என அனைத்து வாகனங்கள் வரிசையாக நீண்ட தூரத்துக்கு நிற்பதோடு, ஆமைபோல் ஊர்ந்து கொண்டே செல்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் அவதி அடைகின்றனர்.

Similar News

News January 23, 2026

செங்கை மக்களே இனி உங்களுக்கு அலைச்சலே இல்லை!

image

செங்கல்பட்டு மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in. 3) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 4) செங்கல்பட்டு மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://chengalpattu.nic.in/ta/ இந்த தகவல்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

திமுக ஆட்சி ஒரு பூஜ்ஜிய ஆட்சி – அன்புமணி ராமதாஸ்

image

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது பேசி வருகிறார். அதில் பேசிய அவர், “தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், 2021 தேர்தல் வாக்குறுதிகளில் 505-இல் வெறும் 66 வாக்குறுதிகளைதான் நிறைவேற்றியுள்ளனர்” எனவும் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியின் முடிவுக்கு இது ஒரு தொடக்கம் எனவும், இது ஒரு பூஜ்ஜிய ஆட்சி எனவும் தெரிவித்தார்.

News January 23, 2026

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன்

image

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். இதில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி எனவும், இதற்காக வேலைகளை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ஸும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார். மோடி ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!