News November 26, 2025
தஷ்வந்த் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டை நாடிய TN அரசு

சிறுமி பாலியல் வழக்கில் தஷ்வந்தை விடுவித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 2017-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு சென்னை HC மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மரண தண்டனையை ரத்து செய்த SC அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
Similar News
News January 21, 2026
NDA கூட்டணியில் மீண்டும் OPS?

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தொடர்ந்து <<18915214>>ஓபிஎஸ்ஸும் <<>>திமுகவில் இணையலாம் என பேசப்பட்டது. இந்நிலையில் NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அவருக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. OPS மகனுக்கு ஒரு தொகுதியும், அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி MLA அய்யப்பனுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
News January 21, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. பெரியளவில் தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60 காசுகள் சரிந்துள்ளது. இதன்மூலம், வரலாறு காணாத அளவிற்கு ஒரு டாலர் ₹91.74 ஆக உயர்ந்துள்ளது. டாலருக்கான வலுவான தேவை, உலக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால், இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2025-ல் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 4.95% சரிந்தது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
கோலியை முந்திய நியூசிலாந்து வீரர்!

ஐசிசி ODI பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் என 352 ரன்கள் குவித்ததன் மூலம் அவர், 61 புள்ளிகள் ஏற்றம் கண்டு 845 புள்ளிகளுடன் உள்ளார். 795 புள்ளிகளுடன் கோலி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். NZ தொடரில் 61 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.


