News November 26, 2025
தஷ்வந்த் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டை நாடிய TN அரசு

சிறுமி பாலியல் வழக்கில் தஷ்வந்தை விடுவித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 2017-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு சென்னை HC மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மரண தண்டனையை ரத்து செய்த SC அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
Similar News
News January 14, 2026
வடநாட்டு பெண்கள் குறித்து தயாநிதி சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் பெண்களை படிக்கச் சொல்லும்போது, வட இந்தியாவில் பெண்களை வீட்டு அடுப்படியில் இருங்கள், குழந்தை பெற்றுக்கொடுங்கள் எனக் கூறுவதாக கல்லூரி விழாவில் தயாநிதி மாறன் பேசியிருந்தார். இது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து BJP தலைவர் அனிலா சிங், அறிவு இல்லாமல் மாறன் மீண்டும் வட இந்திய பெண்களை அவமதித்துள்ளார். DMK-ல் இது வழக்கமானது என்றாலும், இதுபோன்று பேச எப்படி அனுமதிக்கப்படுகிறது என சாடியுள்ளார்.
News January 14, 2026
விடுமுறை காலத்திலும் ₹10,000: அன்பில் மகேஸ்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக மட்டுமே ₹2,500 உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் <<18854282>>அன்பில் மகேஸ்<<>> தெரிவித்துள்ளார். மேலும், பகுதி நேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான ‘முழுநேர ஊழியராக மாற்றம் செய்யப்பட வேண்டும்’ என்பதை சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், மே மாதம் விடுமுறை காலத்தில் ஊதியமாக ₹10,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
News January 14, 2026
பொங்கலும்.. இந்தியாவின் ஸ்பெஷல் உணவுகளும்!

இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. நம்மூரில் சர்க்கரை பொங்கல் எப்படி ஃபேமஸோ, அதேபோல ஒவ்வொரு ஊருக்கும் ஸ்பெஷல் டிஷ் ஒன்னு இருக்கு. அப்படி பல மாநிலங்களிலும் பொங்கலன்று தவறாமல் சமைக்கப்படும் உணவுகளின் லிஸ்ட்டை கொண்டுவந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை தெரிந்துகொள்ளுங்க. உங்க வீட்டில் பொங்கலுக்கு என்ன ஸ்பெஷல்?


