News August 8, 2025

தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை

image

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபர்த்தியில் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தவெகவினர் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில், குழந்தைகள், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக வருகை தருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.

Similar News

News November 7, 2025

மதுரை மாவட்ட காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (6.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

மதுரையில் நாளை மின்தடை

image

மதுரையில் நாளை (நவ7) இந்தியன் ஆயில் நிறுவனம், காஸ் கம்பெனி, கப்பலூர் ஹவுசிங் போர்டு, வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், பிஆர்சி காலனி, நிலையூர், ஆர்வி பட்டி, கைத்தறி நகர், எஸ்ஆர்வி நகர், இந்திரா நகர், கப்பலூர், சிட்கோ, மெப்கோ கம்பெனி, தியாகராஜர் மில், கருவேலம்பட்டி, சம்பகுளம், பரம்புபட்டி, மில் காலனி, எஸ்.புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துப்பட்டி பகுதிகளில் மின்தடை.

News November 6, 2025

மதுரை: +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை, சொக்­க­நா­த­பு­ரம் பகுதியை சேர்ந்­த மாணவி(16). மாந­க­ராட்சி பள்­ளி­யில் பிளஸ் 1 படித்து வந்­தார். 3 மாதத்திற்கு முன்பு இவ­ருக்கு கை வலி ஏற்­பட, அவரால் எழுத முடி­ய­வில்லை. நோய்க்கு சிகிச்சை பெற்றும் வலி குறையாததால் மன­மு­டைந்­து வீட்­டில் இன்று தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். தல்­லா­கு­ளம் போலீ­சார் விசா­ரிக்கின்றனர்.

error: Content is protected !!