News November 25, 2025

தவெகவில் இணைவதை மறுக்காத செங்கோட்டையன்

image

50 ஆண்டு காலம் அதிமுகவிற்காக உழைத்த தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதேசமயம், `நீங்கள் தவெகவில் இணைய உள்ளீர்களா?’ என்ற கேள்விக்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. அந்த கேள்விக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், அவர் இணையப் போவது உறுதியாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News January 24, 2026

தேனி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 24, 2026

பள்ளிகள் கட்டண திருத்த மசோதா நிறைவேற்றம்

image

தமிழக பேரவையில் இன்று 5 முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ்நாடு நீர்வளங்கள், தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தம், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தல், பிச்சை எடுப்பதை தடுத்தல், பள்ளிகள் கட்டண திருத்தம் ஆகிய 5 மசோதாக்களை துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் மேற்கண்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளன.

News January 24, 2026

பாகிஸ்தான் பனிச்சரிவில் ஒரு குடும்பமே அழிந்தது

image

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்வா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பச்சா கான், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் & 2 மருமகள்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சுவாச பிரச்னைகளால் அவதிப்படுவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

error: Content is protected !!