News November 26, 2025
தளபதி திருவிழா.. ஒரு டிக்கெட் இவ்வளவா?

விஜய் கடைசியா என்ன குட்டி கதை சொல்ல போறார் என்ற ஆர்வத்துடன் டிச. 27-ம் தேதி மலேசியாவில் தளபதி திருவிழா நடைபெறவுள்ளது. இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட் விலை குறித்த தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளிவந்துள்ளது. அதன்படி, மேடை அருகில் இருக்கும் சீட்டுக்கு (Level 1) ₹6400, அடுத்த கட்ட வரிசை சீட்டுகளுக்கு (Level 2) ₹4316, தூரமாக இருக்கும் சீட்டுகளுக்கு (Level 3) ₹2100 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
Similar News
News January 21, 2026
தூத்துக்குடி: தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

செட்டியாபத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணி – சத்தியா தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷயானா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் இந்த குழந்தை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டதாக கூறி அவரது தாயார் குலசை G.H-க்கு கொண்டுசென்றார். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குலசை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 21, 2026
கூட்டணி இருக்கா? காங்கிரஸ் பதிலால் திமுக அதிர்ச்சி

திமுக கூட்டணியில் காங்., நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து காங்., தலைவர்களிடம் தலைமை கருத்து கேட்டுள்ளதாக கூறிய அவர், அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளதால் அதனடிப்படையில் தலைமை முடிவெடுக்கும் என்றார். இவருடைய இந்த பதில் திமுகவிற்கு சற்று அதிர்ச்சியளித்திருப்பதாக பேசப்படுகிறது.
News January 21, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3000.. தமிழக அரசு அறிவிப்பு

TN-ல் 96% பேருக்கு பரிசு தொகுப்பு கிடைத்த நிலையில், தொலைதூர நகரங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் என 4% பேருக்கு இந்த பரிசு தொகுப்பை பெற முடியாத சூழல் எழுந்திருக்கிறதாம். எனவே ₹3000 பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பணத்தை வாங்காதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு அறிவித்துள்ளார்.


