News August 6, 2024
தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. மர்ம நபர்கள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதால், போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இன்று காலை, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு இ-மெயில் மூலமாக டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது, இப்பள்ளிக்கு வரும் 9ஆவது வெடிகுண்டு மிரட்டல் ஆகும். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
சென்னை: விமானத்தில் நடுவானில் உயிரிழப்பு

பிஜியில் வசிக்கும் இந்தியரான சதாசிவன், தனது மனைவி நளினி ரஞ்சனி தேவியை சிகிச்சைக்காக சென்னை அழைத்து வர முடிவு செய்தார். இதற்காக இருவரும் அங்கிருந்து, மலேசியா வந்து, மலேசியன் ஏர்லைன் மூலம் சென்னை வந்தனர். அப்போதுநளினி ரஞ்சினிக்கு நடுவானில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை சென்னை விமான நிலைய போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரிக்கின்றனர்.
News January 25, 2026
சென்னை: வீட்டில் பாலியல் தொழில்!

சென்னை வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் சோதனை செய்த போது, வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பாலியல் தொழில் நடத்திய காயத்ரி (31) என்பவரை கைது செய்த போலீசார், 4 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 25, 2026
சென்னை: இளைஞருக்கு அடி உதை!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (28). பெயிண்டர். இவர் நேற்று அந்த பகுதியில் நின்றபோது, அங்கு வந்த இமானுவேல் (26) மற்றும் ஏசையா என்ற சுதந்திரம் (25) ஆகிய இருவரும் வினோத்தை, முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


