News June 18, 2024
தலைமை ஆசிரியரின் நகை திருட்டு – நீதிமன்றத்தில் மனு

போளூர் வட்டம் கேளூர் கிராமத்தைச் சேர்ந்த புளோரி அந்தோணியம்மாள் என்ற தலைமை ஆசிரியர் விபத்தில் காயம் ஏற்பட்டு அத்திமூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது அவருடைய கழுத்தில் இருந்த ஏழு சவரன் தாலி செயின் திருடு போனது. இச்சம்பவம் தொடர்பாக போளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், போளூர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News January 15, 2026
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 15, 2026
தி.மலை: விவசாயி மீது மோதிய அரசு பேருந்து!

சேத்துப்பட்டு பேரூராட்சி நல்லதண்ணீர் குளத்தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (60), விவசாயி. நேற்று காலை மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச் சென்ற போது, போளூரில் இருந்து வந்தவாசியை நோக்கி வந்த ஒரு அரசு பஸ் ராஜ் மீது மோதியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு சொந்தமான 3 மாடுகள், ஒரு கன்றுக்குட்டி ஆகியவை பலத்த காயம் அடைந்தன. இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 14, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


