News October 1, 2025
தர்மபுரி: 2 மாதத்தில் லஞ்ச வழக்கில் 5 அதிகாரிகள் கைது

தர்மபுரி மாவட்டம், சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்வரின் ஜிஎஸ்டி எண் திடீரென முடக்கப்பட்டதால், துணை வணிக வரி அதிகாரி செல்வக்குமாரை சந்தித்த போது அவர் ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் விஏஓ, இன்ஸ்பெக்டர், போலீஸ், கருவூல அதிகாரி, வணிகவரி அதிகாரி என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 10, 2025
தருமபுரி: வாகனம் மோதி பெண் பலி

அனுமன் தீர்த்தம் புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரபாகரன் (39), தனது மனைவி மரியம்மாள் (38) மற்றும் 2 குழந்தைகளுடன் ஓமலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம், பொம்மிடி-கோபிநாதம்பட்டி சாலையில் வந்தபோது, சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மரியம்மாள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 10, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.10) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் ஹரிச்சந்திரன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!