News November 26, 2025

தர்மபுரி: வீட்டு வாசலில் வாலிபர் சடலம் !

image

காரிமங்கலம் அருகே, பெரியாம்பட்டி அடுத்த, ஜொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(32) என்ற திருமணம் ஆகாத நபர் தனது வீட்டின் முன்பாக ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 19, 2026

தருமபுரியில் மூச்சு திணறி பலி!

image

கம்பைநல்லூர் அருகே மஞ்சமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் (38). இவர், நேற்று (ஜன.18) மாலை அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி பரிதமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 19, 2026

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயண சலுகை அட்டை

image

தருமபுரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயண சலுகை அட்டை (பஸ் பாஸ்) வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் பயனாளிகள் தங்களின் ஆதார், புகைப்படம், அடையாள அட்டை, கல்வி பயிலும்/பணிபுரியும்/தொடர் மருத்துவ சிகிச்சை சான்றிதழ்களை சமர்ப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 19, 2026

தருமபுரி: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ)<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!