News November 19, 2025
தர்மபுரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 17, 2026
தருமபுரி: கையும் களவுமாக சிக்கிய போதை ஆசாமி!

மாரண்டஅள்ளி போலீசார் எம்.செட்டிஅள்ளி நேற்று (ஜன.16) ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் எம்.செட்டிஅள்ளியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் அந்த இளைஞரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 17, 2026
தருமபுரி: கிணற்றில் விழுந்து பலி!

நல்லம்பள்ளியை அடுத்த தேவர் ஊத்துப்பள்ளத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி குமரேசன் (34). இவர் சம்பவத்தன்று இரவு அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் முயற்சித்தும் காப்பாற்ற முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் குமரேசன் கிணற்றில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து அதிய மான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
News January 17, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தொப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


