News August 24, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து செல்லும் காவலர்கள் இரு பாதியாக பிரிக்கப்பட்டு முதல் பாதி விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக K. பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் மணிகண்டன், பென்னாகரம் முரளி, பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News January 18, 2026

தருமபுரி அருகே வேன் கவிழ்ந்து 7 பெண்கள் படுகாயம்

image

ஓசூர் அருகே பாகூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மிகப் பயணம் முடிந்து திரும்பியபோது, தருமபுரி சோகத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராமக்கா, லட்சுமி உள்ளிட்ட 7 பெண்கள் காயமடைந்தனர். தருமபுரி டவுன் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2026

தருமபுரி: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

image

தருமபுரி மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

News January 18, 2026

தருமபுரியை உலுக்கிய பெரும் துயரம்!

image

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே சுங்கரஅள்ளியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (48), தீராத வயிற்று வலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றும் வலி குறையாததால், கடந்த 13-ம் தேதி விபரீத முடிவெடுத்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி உயிரிழந்தார். இதனை, கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!