News September 29, 2025

தர்மபுரி மக்களே அரசு சேவைகள் இனி உள்ளங்கையில்

image

தர்மபுரி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுதல், சொத்து வரி செலுத்துதல் உள்ளிட்ட 32 சேவைகள் இனி உங்கள் உள்ளங்கையில். அரசின் சேவைகளுக்கு இனி நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் ஒரே வாட்ஸ் அப் எண்ணில் கிடைக்கும் . 9445061913 என்ற எண்ணிற்கு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ என மெசேஜ் அனுப்பினால் போதும். நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News November 10, 2025

தருமபுரியில் உலக அமைதி தின பேரணி

image

நாளை உலக அமைதி தினத்தை (11-11-2025) முன்னிட்டு, ஒருங்கிணைந்த கிராமப்புற கல்வி அறக்கட்டளை & கிராம விழிகள் அறக்கட்டளை இணைந்து, இன்று (நவ.10) தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து அமைதிப் பேரணி நடைபாதையாக நடைபெற்றது. இது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் மருத்துவத் துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

News November 10, 2025

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்

image

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், பெற்றோர் இல்லாத உயர் கல்வியில் சேர்ந்துள்ள 8 தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக மடிக்கணினிவழங்கப்பட்டது . இதை தொடர்ந்து மூன்று மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஷ் இன்று (நவ.10) மடிக்கணினிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 10, 2025

தருமபுரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!