News November 26, 2025
தர்மபுரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மஜித் தெருவைச் சேர்ந்த நெடுஞ்செழியன். இவரது மனைவி தனலட்சுமி. திருமணமாக 7 ஆண்டுகள் ஆன நிலையில் குடும்ப சண்டை காரணமாக தனலட்சுமி இன்று(நவ.25) மாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு குறித்து அருர் கோட்டாட்சியர் செம்மலை மற்றும் பாப்பிரெட்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
Similar News
News January 16, 2026
தருமபுரி: கணவன் தூக்கிட்டு தற்கொலை!

அரூர், இட்லபட்டியை சேர்ந்த தொழிலாளி வேடியப்பன் (40). இவரது மனைவி குடும்ப பிரச்சினையினால் சில நாட்களுக்கு முன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன் வேடியப்பன் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தார். மீண்டும் அவர் தாயார் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த வேடியப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 16, 2026
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.16) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.22, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.30, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.20, கொத்தவரை: ரூ.45, பச்சைமிளகாய்: ரூ.36, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News January 15, 2026
இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன-15) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதீஸ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் வேலண் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


