News April 2, 2025
தர்மபுரியில் இலவச உயர்கல்வி வழிகாட்டி முகாம் அறிவிப்பு

பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவ மாணவிகள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்” என்ற தலைப்பின் கீழ் நாளை (ஏப்.3) தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள ரோட்டரி ஹாலில் முன்னணி பல்கலைக்கழகங்கள் பங்கு பெறும் இலவச உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இதில், கலந்துகொண்டால் மாணவர்களுக்கு நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.
Similar News
News January 20, 2026
தருமபுரியில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

சோகத்தூர், அதகப்பாடி மற்றும் வெள்ளிசந்தை துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து குமாரசாமிபேட்டை, சோகத்துார், ரெட்டிஹள்ளி, ஏ.ஆர்.கோட்ரஸ், பிடமனேரி, பங்குநத்தம், அதகபாடி, சோம்பட்டி, இண்டூர், பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, வெள்ளிசந்தை சுற்றுபுற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
தருமபுரியில் ரூ.11.18 கோடிக்கு விற்பனை!

தருமபுரி மாவட்டத்தில் 66 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சராசரியாக தினமும் ரூ.2.20 கோடி மதுபானங்கள் விற்பனையாகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் ரூ.11.18 கோடிக்கு மது விற்பனை நடந்ததாகவும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை சரிந்து காணப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் நேற்று (ஜன.19) மாலை தெரிவித்துள்ளனர்.
News January 20, 2026
தருமபுரி: கடைக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

மோளையானூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் முகேஷ் (14). கடந்த 17-ம் தேதி இரவு கடைக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடிய போது அப்பகுதி அரசு பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றில் முகேஷ் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


