News May 4, 2024
தருமபுரி: விதிமீறிய 30 வாகனங்களுக்கு அபராதம்!

தருமபுரி நான்கு ரோடு பழைய தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து காவலர்கள் நேற்று(மே 3) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டேட் வங்கி முன்பு போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 8, 2025
தருமபுரி: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

தருமபுரி மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <
News November 8, 2025
தருமபுரி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி!

பொம்மிடி அருகே உள்ள வாசிகவுண்டனூரை சேர்ந்த புத்தன் ( 32), லாரி டிரைவர். இவர் தந்தை ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை அறிந்த மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News November 8, 2025
தர்மபுரி:ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவ:8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


