News November 14, 2025
தருமபுரி: ரயில் சேவையில் மாற்றம்!

தருமபுரி மார்க்கத்தில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் நவ.16ம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, பெங்களூர்-எர்ணாகுளம் ரயில் தருமபுரி வழியாக செல்லாமல், திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-காரைக்கால் (16529) ரயில், பையனப்பள்ளி வழியாக சேலம் செல்லும். பெங்களூர்-கோவை வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
தருமபுரி: காரில் குட்கா கடத்திய வடமாநில இளைஞர்!

தருமபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் போலீசார் குண்டலப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் நாமக்கல்லுக்கு 56 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரகுராம் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கார் மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News December 16, 2025
தருமபுரி: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!

பொம்மிடி அருகே துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பையர்நத்தத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு வாகனங்களும் சாலையோரம் நின்று கொண்டிருந்த மணிமேகலை மற்றும் அவரது மகன் அன்பரசு மீதும் மோதின. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் சதாசிவம், கோவிந்தராஜ் உட்பட 5பேரும் படுகாயமடைந்தனர்.
News December 16, 2025
தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு – இன்று (டிச-16) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!


