News November 25, 2025
தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News January 24, 2026
தருமபுரியில் தொழிலாளா் துறையினா் அதிரடி!

தருமபுரியில் துணிக்கடையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளரை தொழிலாளா் துறையினா் நேற்று மீட்டனா். மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ப. ராஜசேகரன் ஆலோசனையின் பேரில், தருமபுரி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனா். இதில் 17 வயது சிறுமி துணிக்கடையொன்றில் பணிக்கு அமா்த்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளா் துறை குழுவினா் அவரை மீட்டனா்.
News January 24, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் முத்து ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!