News August 8, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக எஸ் .கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் இளவரசி, மற்றும் பாலக்கோடு நடராஜன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
அலுவலக ஈப்பு பொது ஏலம் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக ஈப்பு (வாகன எண். TN09BG 2345) Bolero LX என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.75,000/- என்ற விலைக்கு விற்பனை செய்திட தொழில்நுட்ப வல்லுநர் குழுவினரால் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை வருகின்ற 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறு ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
News November 7, 2025
தொப்பூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில் (நவ.5) காலை 12 மணி அளவில் கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு பணியில் இருப்பவரின் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
News November 7, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 2025 மாதத்திற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று நவ.07-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.


