News November 20, 2024
தருமபுரி மருத்துவமனைகளுக்கு கலெக்டர் உத்தரவு

Low Risk இருந்து High Risk க்கு மாறும் தாய்மார்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவரை ஊர்தியின் மூலம் அனுப்பப்பட வேண்டும். மேலும், அவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் PICME PORTAL-ENTRY போட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 17, 2025
தருமபுரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 20/12/2025 சனிக்கிழமை அன்று டான் போஸ்கோ கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இந்த செய்தியை வேலை தேடும் நண்பர்களுக்கு பகிரவும்!
News December 17, 2025
தருமபுரி: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

தருமபுரி மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
தருமபுரி: பூட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை!

தருமபுரி: திம்மம்பட்டியைச் சேர்ந்த முரளி (35), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, 5 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.


