News October 19, 2025

தருமபுரி: திருக்குறள் முற்றோதல் – ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அறிவித்துள்ளார். இதில், கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் தமிழ் வளர்ச்சியின் tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பித்து கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

தருமபுரியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்!

image

தருமபுரி ஆட்சியர் ரெ.சதீஷ், இன்று (டிச.15) செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகளுக்கு ரூ.738.63 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்,நேற்று நடைபெற்ற அரசியல் நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

தருமபுரி: மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு!

image

தருமபுரியில், கடந்த 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண தேர்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அந்த தேர்வானது நிர்வாக காரணங்களினால் வரும் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் பல்வேறு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது. என மாவட்ட ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

தருமபுரி: EB பில் நினைத்து கவலையா??

image

தருமபுரி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

error: Content is protected !!