News December 16, 2025
தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு – இன்று (டிச-16) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News January 25, 2026
தருமபுரி: அடுத்தடுத்து விபரீதம்; மூதாட்டி சோக முடிவு!

தருமபுரி கருவூல காலனியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (68). மகளுடன் வசித்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்த இவரை குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.25) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.25, கத்தரிக்காய்: ரூ.15, வெண்டைக்காய்: ரூ.30 முள்ளங்கி: ரூ.46, அவரைக்காய்: ரூ.26, கொத்தவரை: ரூ.46, பச்சைமிளகாய்: ரூ.30, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News January 25, 2026
தருமபுரி மக்களே! OTP வருதா? ALERT!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.


