News November 3, 2025

தருமபுரி: ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு

image

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று (நவ.01) இரவு விநாடிக்கு 8000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று (நவ.02), ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 6500 கனஅடியாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மழைபெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 9, 2025

தருமபுரி: நாய் குறுக்கே வந்ததால் காவலர் இறப்பு!

image

தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தமிழழகன்(56). இவர் நேற்று (டிச.07) இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகில் திடீரென நாய் குறுக்கே வந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தமிழழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 9, 2025

தருமபுரி: பிக்கப் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!

image

தருமபுரியில், கோபாலபுரம் சர்க்கரை ஆலை நான்கு ரோட்டில் பொம்மிடி அருகில் நேற்று பிக்கப் வாகனம் மோதி பெண் உயிரிழந்துள்ளார். இதில், புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு அவரது மகன் அருள், ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும், இதுகுறித்து எ.பள்ளிபட்டியில் நேற்று (டிச.7) போலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News December 9, 2025

தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு- இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!