News March 21, 2024
தருமபுரி அதிமுக வேட்பாளர் இவர்தான்!

தருபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அசோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 7, 2026
தர்மபுரியில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கடந்த பிப்.2ஆம் தேதி வாணியாறு அணைப் பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், மூதாட்டியை பைக்கில் அழைத்துச் சென்று, அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 7, 2026
தர்மபுரியில் துடிதுடித்து பலி!

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வாலிபர் சோகிப்(24). இவருடைய உறவினர் அபீஸ் உல்லா(38). இவர்கல் இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி பிரிவு சாலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். தொடர்ந்து, அதே வழியில் வந்த லாரி சோகிப் மீது ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 7, 2026
தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்- 6) இரவு முதல் இன்று காலை (பிப்- 7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


