News October 1, 2025
தருமபுரியில் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் காந்தி ஜெயந்தியை (02.10.2025) முன்னிட்டு, அக்.1 இரவு 10.00 மணி முதல் அக்.3 காலை 12.00 மணி வரை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகள், இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் மதுபானங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
தருமபுரி: பெற்ற மகளை பொய் சாட்சியாக்கிய ஆசிரியர்!

தருமபுரியை சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் (45). இவரது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். சரவணன், ஜூன்-16ல், தன் நண்பர்கள் இருவர், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பின் நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், நண்பர்களை பழி வாங்க, தன் தந்தை சரவணன் பொய் புகார் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து, சரவணனை போக்சோவில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
News December 14, 2025
தருமபுரி: கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

காரிமங்கலம் அருகே கொட்டுமாரன அள்ளி அடுத்த பெரியானஅள்ளி – பாலக்கோடு சாலையில், நேற்று (டிச.13) 2 சக்கர வாகனத்தில் கொட்டுமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கௌதம் (25) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கௌதம் உயிரிழந்தார். பின் தகவல் அறிந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி ஜிஹெச்க்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
தருமபுரி ஆட்சியரின் புது தகவல்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.


