News October 12, 2025
தருமபுரியில் ஒரு மினி ஊட்டி

தருமபுரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், 3000 அடி உயரத்தில் வத்தல்மலை அமைந்துள்ளது. இது ‘ஏழைகளின் குட்டி ஊட்டி’ என அழைக்கப்படுகிறது. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் ரம்மியமான பயணத்தை அளிக்கும் இது, குளிர்ச்சியான காலநிலை மற்றும் மூலிகைச் செடிகள் நிறைந்தது. காபி, மிளகு சாகுபடி இங்கு பிரபலம். வியூ பாயிண்ட், வத்தல்மலை அருவி ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இது ஒரு சிறந்த பட்ஜெட் சுற்றுலாத் தலமாகும்.
Similar News
News December 14, 2025
தருமபுரி: பெற்ற மகளை பொய் சாட்சியாக்கிய ஆசிரியர்!

தருமபுரியை சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் (45). இவரது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். சரவணன், ஜூன்-16ல், தன் நண்பர்கள் இருவர், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பின் நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், நண்பர்களை பழி வாங்க, தன் தந்தை சரவணன் பொய் புகார் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து, சரவணனை போக்சோவில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
News December 14, 2025
தருமபுரி: கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

காரிமங்கலம் அருகே கொட்டுமாரன அள்ளி அடுத்த பெரியானஅள்ளி – பாலக்கோடு சாலையில், நேற்று (டிச.13) 2 சக்கர வாகனத்தில் கொட்டுமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கௌதம் (25) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கௌதம் உயிரிழந்தார். பின் தகவல் அறிந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி ஜிஹெச்க்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
தருமபுரி ஆட்சியரின் புது தகவல்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.


