News November 30, 2024

தருமபுரியில் அதி கனமழைக்கான எச்சரிக்கை

image

புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் விடியவிடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Similar News

News November 8, 2025

பாலக்கோட்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை காலியிடம்

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் செயல்படும் 145, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28.11.2025 வரை நீடிக்கப்பட்டு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (07.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன் , தோப்பூரில் பிரபாகரன், மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் கிருஷ்ணாபுரத்தில் கார்த்திக்கேயன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 7, 2025

தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!