News May 13, 2024

தம்பி மனைவியை வெட்டிய அண்ணன்

image

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள தொட்டனம்பட்டியில் இன்று கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவி சுசீலா (39) என்பவரை குமரவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுசீலா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: குழந்தை பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வங்கமனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு ஒன்றரை மாத வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை நேற்று இரவு திடீரென உயிரிழந்து விட்டது. குழந்தையின் திடீர் சாவு குறித்து, வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 15, 2025

திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!

News December 15, 2025

திண்டுக்கல்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!