News January 11, 2025
தம்பதியை மிரட்டி பணம் திருட்டு -3 போ் கைது

புதுச்சேரி சின்னையன்பேட்டையைச் சோ்ந்தவா் சங்கா்(எ) பரணியின் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சங்கா், அவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம், கைப்பேசிகளைத் திருடிச் சென்றனர். புகார் படி வழக்கு பதிந்த போலீசார் மூளக்குளத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் வாணரப்பேட்டையைச் சோ்ந்த நிவாஸ் அனிச்சம்குப்பத்தைச் சேர்ந்த சூரி ஆகியோரை கோரிமேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
புதுச்சேரி: சீற்றத்துடன் கரையில் மோதும் அலை!

புதுச்சேரியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழை இன்றி வானம் கரு மேகமூட்டமுடன் காணப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

News November 17, 2025
காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுறை அறிவிப்பு

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று புதுவை மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாளை (நவ.18) காரைக்காலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.