News October 12, 2025

தமுக்கம் கண்காட்சி – அனுமதி இலவசம்!

image

‘மாமதுரை – இயற்கை மதுரை’ கண்காட்சி நேற்று தமுக்கத்தில் துவங்கியது. இதில் இயற்கை விவசாயிகளின் பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், கீரை வகைகள், செக்கு எண்ணெய், சிறுதானிய இனிப்பு, கார வகைகள், சூப்கள், காய்கறி நாற்றுகள், விதைகள், மரக்கன்றுகள், அழகுச்செடிகள், மண்புழு & இயற்கை உயிர் உரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது; அனுமதி இலவசம். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 11, 2025

திருமங்கலம் டோல்கேட் கொலை சம்பவம்: முதியவரும் பலி

image

திருமங்கலம் கப்பலூரில் நேற்று முன்தினம் இரவு கல்யாண் குமார் 19. மது போதையில் தகராறு செய்து அவ்வழியாக சென்ற போஸை 75 அரிவாளால் வெட்டினார், பின்னர் டோல்கேட்டில் தனியார் பஸ் கண்டக்டர் அழகர்சாமியிடம் டைம் கேட்டு தகராறு செய்து வெட்டியதில் அவர் இறந்தார். கல்யாண் குமார் கைதான நிலையில், நேற்று சிகிச்சையில் இருந்த போஸ் இறந்தார். கல்யாண் குமார் மீது போலீசார் இரட்டை கொலை வழக்கு பதிவு செய்தனர்.

News December 11, 2025

மதுரை: ஜப்தி செய்யப்பட்ட கார்; இளைஞர் தற்கொலை.!

image

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (30) சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவதற்காக, கே.கே. நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு கடந்த 6 மாதமாக தவணை கட்டாததால் பைனான்ஸ் அதிகாரிகள் காரை ஜப்தி செய்து விட்டனர். இதன் காரணமாக மனமுடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார். சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 11, 2025

மதுரையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

image

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!