News August 23, 2024
தமிழக சிறைகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

தேனி, தருமபுரி, விழுப்புரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 95 கிளைச்சிறைகள் உட்பட 102 சிறைகளில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. 3 ஆண்டு அனுபவம் கொண்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்கலாம். சிறைத்துறை, இணையதள <
Similar News
News November 17, 2025
சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

சென்னையில் இன்று (நவ.17) மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சென்னையில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 16, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்


