News July 11, 2024
தமிழக கேரள எல்லையில் நக்சல்கள் முகாம்

தமிழக கேரள எல்லைப் பகுதியான பந்தலூர் மானந்தவாடி பகுதியில் நக்சல் தடுப்பு போலீஸ் எஸ்பி பிஜூராஜ் தலைமையில் போலீசார் நேற்று (ஜூலை 10) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நக்சல்கள் தங்கி இருந்த குடில், சீருடைகள், பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நக்சல் கூடாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் தமிழக கர்நாடக எல்லையை ஒட்டிய வனப்பகுதிக்கு இடம் மாற வாய்ப்பு உள்ளது” என்றனர்.
Similar News
News July 8, 2025
அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

நீலகிரி, உதகை பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஆட்சியர் சங்கீதா உட்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
News July 8, 2025
மாவட்ட ஆட்சியரிடம் குவிந்த 201 மனுக்கள்

ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பட்டா, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
News July 8, 2025
நீலகிரி: மலை ரயில் இயக்கம் நீட்டிப்பு

குன்னூர் – ஊட்டி இடையே தினமும் தலா 4 முறையும், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்க பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை வெள்ளி முதல் திங்கள் வரையும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ரயில் பயணத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் ஆக.18 வரை இதை நீட்டித்துள்ளனர்.