News August 5, 2024

தமிழக அரசு, ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு ஆட்சியர் கடந்த மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அவரது மனைவி அண்டோ ஜெனிதா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு, செங்கல்பட்டு ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு இன்று உத்தரவிட்டது.

Similar News

News January 19, 2026

செங்கல்பட்டு:குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

செங்கல்பட்டு:செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

செங்கல்பட்டில் இனி தண்ணீர் பிரச்சினை இருக்காது!

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நெமிலி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், 342.6 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில், அமைய உள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப் பணிக்கு, தமிழக முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!