News December 17, 2025
தமிழகம் கேட்டது… மத்திய அரசு தந்தது: CM

கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு கேட்ட நிதியில் (₹24,670 கோடி), வெறும் 17%-ஐ (₹4,130 கோடி) மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு வென்றதுபோல, காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று குறிப்பிட்டார்.
Similar News
News January 25, 2026
உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பு: பிரேமலதா

உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பேன் என பிரேமலதா கூறியுள்ளார். திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த அவர், முருகன் அருளால் தாங்கள் சேரும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியில் இணைவோம் என்றும் பிரேமலதா கூறினார். ராமதாஸ், பிரேமலதா, கிருஷ்ணசாமி ஆகியோர் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News January 25, 2026
3-வது T20I: பும்ரா IN, ஹர்ஷித் OUT?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது T20I போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. பேட்டிங்கில் மாற்றம் இருக்காது என கூறப்படும் நிலையில், அணியில் மீண்டும் பும்ரா சேர்க்கப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. கை விரலில் காயம் ஏற்பட்டு 2-வது போட்டியில் விளையாடாத அக்சர் படேலும் இன்றைய போட்டியில் விளையாடலாம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் அணிக்கு திரும்பினால், ராணா & குல்தீப் நீக்கப்படலாம்.
News January 25, 2026
மொழிப்போர் தியாகிகளுக்கு EPS வீரவணக்கம்

ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு இன்று வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், சங்கத்தில் வளர்ந்து, சரித்திரங்கள் பல படைத்து, சீரிளமை கொண்டு விளங்கும், நம் உயிருக்கு நேராம், செந்தமிழர் தாயாம் அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என EPS பதிவிட்டுள்ளார்.


