News November 21, 2024
தமிழகமே போராட்டக் களமாக மாறியுள்ளது – ஆர்.பி. உதயகுமார்

திமுக அரசின் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு மக்களை இன்று வீதியில் நிறுத்தியுள்ளது. இதற்கு உரிய பதிலை, உரிய பாடத்தை வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்குப் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை மாவட்டத்தில் அண்ணா பேருந்து நிலையம், ஒத்தக்கடை, வண்டியூர் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.15) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
News November 14, 2025
மதுரை: டூவீலர் மீது வேன் மோதி விபத்து; ஒருவர் பலி.!

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்த்த செல்வராஜ் மகன் கார்த்திக் 30. இவரும் இவரது நண்பர் தினேஷ்குமார் இருவரும் டூ வீலரில் பள்ளப்பட்டியில் இருந்து சோழவந்தான் நோக்கி வந்தனர். இடையில் கருப்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த ஈச்சர் வேன் இவர்கள் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ்குமார் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
News November 14, 2025
மதுரையில் புதிய காவல் நிலையம்

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட,முக்கிய ஒரு கிராமமாக இருந்து வருவது தான் மாடக்குளம்.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 71 வது வார்டாகிய இந்த பகுதியில்,பொன்மேனி, விராட்டிபத்து,கோச்சடை மற்றும் மாடக்குளம் ஆகிய பகுதிகளை அடக்கிய புதிய காவல் நிலையம் மாடக்குளம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.விரைவில் காவல்துறையினரின் அன்றாட பணிகள் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


