News August 22, 2024
தமிழகத்தில் 4 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் பணியாற்றக்கூடிய நான்கு உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜுவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நடைபெற்ற செம்பியம் காவல் நிலையத்திற்கு புதிய உதவி ஆணையரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் சென்னை செம்பியம் காவல் நிலைய உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 9, 2025
சென்னை: பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதி

தமிழக பொறுப்பு டிஜிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ள நிலையில், இன்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News December 9, 2025
சென்னை – நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதிகளில் வருமானவரி சோதனை

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ரிபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திலும், தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள வைட் ஹவுஸ் வைர நகைக்கடையிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு குறித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், நிறுவன ஆவணங்கள் மற்றும் நிதி பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு.
News December 9, 2025
சென்னை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <


