News November 15, 2025
தமிழகத்திற்கு நெருக்கமான யூடியூபர் தோல்வி

யூடியூபில் 96 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட பிஹார் யூடியூபர் மனிஷ் காஷ்யப், 50,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜன்சுராஜ் கட்சி சார்பில் சான்பாடியா தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,000 வாக்குகளை பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர், தமிழ்நாட்டில் பிஹாரிகள் அடித்து கொல்லப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பின்னர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 547 ▶குறள்: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். ▶பொருள்: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.
News December 12, 2025
நானாவது கொஞ்ச நேரம் நின்றிருக்க வேண்டும்: SKY

எப்போதும் அபிஷேக் சர்மாவை நம்பி இருக்க முடியாது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். SA உடனான 2-அவது டி20 தோல்விக்கு பின்னர் பேசிய அவர் தானும், கில்லும் ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், கில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால், நானாவது கொஞ்ச நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த தோல்வி ஒரு பாடமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
‘வா வாத்தியார்’ இன்று ரிலீசாகாது

‘வா வாத்தியார்’ படம் இன்று வெளியாகாது என தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், பிரச்னையை சரிசெய்ய தீவிரமாக வேலை செய்து வருகிறோம், விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடன் பாக்கியை திருப்பி செலுத்தும் வரை <<18527361>>இப்படத்தை<<>> ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்தது.


