News July 16, 2024
தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
Similar News
News July 11, 2025
தஞ்சாவூா்: கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சிகள் ஜூலை 15, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கறவை மாட்டு பண்ணையம் குறித்து ஜூலை 15ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளா்ப்பு குறித்து 22ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)
News July 11, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
பேருந்து நிலையக் கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

பட்டுக்கோட்டை நகராட்சி, நரியம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையக் கடைகள் மற்றும் ஆண்டு குத்தகை இனங்களுக்கு வருகின்ற 11.07.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 11க்கு நடைபெற இருந்த பொது ஏலம் /ஒப்பந்தப்புள்ளி நிர்வாக காரணங்களால் 17.07.2025க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது ஏலம் 17.07.2025 வியாழக்கிழமை அன்று காலை 11மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் என நகராட்சி அறிவித்திட்டுள்ளது.