News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

Similar News

News July 11, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வு குறித்து கூறுகையில், “ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் மாணவர்களின் நலன் கருதி குடிநீர், கழிவறை, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

News July 11, 2025

கடலூர்: நகைக்காக கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை

image

சிதம்பரம் அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரா (60) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து மருதூர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பசுபதி (27) என்பவர், மூதாட்டி அணிந்திருந்த 2½ பவுன் நகைக்காக வீட்டில் தனியாக வசித்து வந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News July 11, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் (ஜூலை 10) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!