News August 17, 2025

தபால் தலை சேகரிப்பு வினாடி- வினா போட்டி!

image

“6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டி நடக்கவுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.6,000 பரிசு பெறலாம். விண்ணப்பப் படிவத்தை https://tamilnadupost.cept.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு 0427-2253050, 2266370 எண்களை அழைக்கலாம். இப்போட்டி செப்.20-ல் நடக்க உள்ளது” என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்!

Similar News

News December 14, 2025

சேலம்: சாா்லப்பள்ளி – மங்களூரு இடையேசிறப்பு ரயில்!

image

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து மங்களூரு ஜங்ஷன் சிறப்பு ரெயில் (07267) வருகிற 24-ந் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள்
8.23 சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 26-ந் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு ஜங்ஷன் சென்றடையும். இதே போல் மறு மார்க்கத்தில் 30-ந் தேதி காலை 9.55 மணிக்கு புறப்படும்.

News December 14, 2025

சேலத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை!

image

சேலத்தில் மின் பராமரிப்பு நடைபெறுகின்றது. இதன் காரணமாக நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு,தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி,கொண்டலாம்பட்டி,நெய்க்காரப்பட்டி,உத்தமசோழபுரம்,பூலாவரி,கரட்டூர், சூரமங்கலம்,மெய்யனுார், சின்னேரிவயல்,பள்ளப்பட்டி,சாமிநாதபுரம் பகுதிகளில் நாளை(டிச.15) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

News December 14, 2025

சேலம்:திருமணம் ஆகாத ஏக்கத்தில் சோகமான முடிவு!

image

சேலம்: இந்திரா நகர் மேச்சேரி பிரிவு ரோட்டைச் சேர்ந்த பழ வியாபாரி லட்சுமண பெருமாள் (30), திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று தனது பழக்கடை குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!