News February 24, 2025
தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 9, 2025
ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வுக்குபின் பதில் – ஆட்சியர்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை தடுக்க ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அளித்த பதிலில் “தெற்கு ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து உரிய ஆய்வுக்குப் பின் பதில் அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
News July 9, 2025
கடலூர்: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடலூர் ரயில் விபத்து குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை (RPF) சம்மன் அனுப்பியுள்ளது. 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
News July 9, 2025
கடலூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஸ்வேஷ்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவர் விஸ்வேஷ் வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரது சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.