News October 11, 2024
தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேகம்

காஞ்சிபுரம், ஓரிக்கை, பேராசிரியர் நகர் பகுதி-2ல் குபேர விநாயகர் கோயில் உள்ளது. நேற்று காலை 8:30 மணிக்கு தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் & ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் குபேர விநாயகர், கோடீஸ்வரர், பகவதி புவனேஸ்வரியம்மன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர் சிறப்பு பூஜை செய்யபட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News November 14, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
கல்லூரி வளாகத்தில் SIR குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் தனியார் மகளிர் கல்லூரி வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் ஆணையர் மற்றும் ஆட்சியர் கலைசெல்வி மோகன் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News November 13, 2025
காஞ்சிபுரத்தில் ஒரு ரூபாய் டிக்கெட்!

சென்னை ஒன் செயலி மூலம், ₹1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ₹1. இந்த “One Rupee Ticket” சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!


