News November 19, 2024

தனுஷ்கோடி ரோடு கடைகளால் ஆக்கிரமிப்பு

image

தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக 20 மீனவ பெண்கள் பழங்கள் விற்றனர். காலப்போக்கில் இவர்களுக்கு போட்டியாக 120க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாயுள்ளது. மேலும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகள் தனுஷ்கோடி கடலோரம் வீசப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

கீழக்கரை விபத்தில் மேலும் ஒருவர் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையம் பகுதியில் கடந்த டிச.06 அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அதில் காயமடைந்த கீழக்கரை அலவாய்கரவாடியை சேர்ந்த மாதேஸ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

News December 9, 2025

ராமநாதபுரம்: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை. இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News December 9, 2025

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 491 பேர் கைது

image

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று யூனியன் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர் .நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்வதற்கு கிளீனி ங் அலவனஸ் ரூ.300 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய நிலையில் 191 பேரை போலீசார் கைது செய்தனர்.அதே போல் முதுகுளத்துாரில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட 300 பேரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!