News August 19, 2024

தனியார் பேருந்து மோதி கணவன், மனைவி பலி

image

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(53). இவர் தனது மனைவி துர்கா (47) உடன் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு இன்று அதிகாலை பைக்கில் சென்றுள்ளார். வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் சென்றபோது, தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்து பைக் மீது பின்பக்கமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் கோடீஸ்வரனை(27) போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 21, 2026

செங்கல்பட்டில் அதிர்ச்சி!

image

செங்கல்பட்டு கே.கே.நகர் பகுதியில் நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா சைன் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணி பகுதியைச் சேர்ந்த விக்ரம் (25) என்பவர் மது போதையில் தனது சொந்த வாகனத்திற்கு தானே தீ வைத்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 21, 2026

செங்கல்பட்டில் 300 பேர் அதிரடி கைது!

image

காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாவட்டத் தலைவர் சசிகலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. திடீரென ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 300 பேரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

News January 21, 2026

தாம்பரம் – கொல்கத்தா வந்தே பாரத் ரயில் இயக்கம்

image

தாம்பரம் – கொல்கத்தா (சாந்திரகாச்சி) இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை ஜனவரி 18 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று காலை இந்த ரயில் தாம்பரம் வந்தடைந்தது. தமிழகத்திற்கான மூன்றாவது அம்ரித் பாரத் சேவையான இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 23 முதல் தாம்பரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஐந்து புதிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

error: Content is protected !!