News May 8, 2024
தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு: தந்தை பலி

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குழியை சேர்ந்த தந்தை, மகனை மர்ம நபர்கள் இன்று (மே 8) அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தந்தை டேவிட் (56) சம்பவ இடத்திலேயே பலியானார். மகன் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
நெல்லை: ஒரே நாளில் 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

பாளை பகுதியைச் சேர்ந்த லிங்கத்துரை (23), மகாராஜா(30) மற்றும் பாஸ்கர் (37) ஆகியோர் கொலை முயற்சி மற்றும் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்ததாக கூறப்படுகிறது. எனவே துணை ஆணையர்கள் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி 3 பேரும் நேற்று (பிப் 18) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
News February 19, 2026
இரு குடும்பம் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.