News January 15, 2025
தஞ்சை-விக்கிரவாண்டி சாலையில் சுங்க கட்டணம் வசூல்

தஞ்சை-விக்கிரவாண்டி இடையே, புதிய புறவழிச்சாலை (NH.45 சி) 164.28 கிலோ மீட்டர் துாரம் அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. இந்நிலையில், தஞ்சை-சோழபுரம் இடையே சாலைப்பணிகள் நிறைவு பெற்று, வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால், பாபநாசம் அருகே வேம்புக்குடியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் வரும் ஜன.20 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
Similar News
News November 11, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(நவ.10) இரவு 10 மணி முதல் இன்று(நவ.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கிய ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை, சுந்தரபெருமாள் கோயில் ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்த மணிமேகலை என்பவர், மழையின் போது வீடு இடிந்து விழுந்து உயிரிழந்ததால் அவரின் வாரிசுதார்களுக்கு வழங்கினார்.
News November 10, 2025
தஞ்சாவூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

தஞ்சாவூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


