News May 9, 2024
தஞ்சை: மின்கம்பத்தில் மோதி வாலிபர் சாவு

கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்தவர் அருண்(19). இவர் நேற்று பாபநாசம் அருகே வளத்தாமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளத்தாமங்களம் மெயின் ரோட்டில் வந்த போது நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 19, 2026
தஞ்சாவூர்: போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (பிப்.18) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!