News November 3, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், மதுக்கூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை (4/11/2025) காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே போல் நாளை மறுநாள் (5/11/2025) ஒக்கநாடு கீழையூர், மாரியம்மன் கோயில், வீரமரசன்பேட்டை துணைமின் நிலையத்திலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 7, 2025
தஞ்சை: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சினம்பூண்டி சாளுவன்பேட்டைத் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் மனைவி ஜெகதாம்பாள். இவர் வீட்டின் முன்பு தன் பேரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதே தெருவை சேர்ந்த சின்னராசு மகன் ஆனந்த் என்பவர் குடிபோதையில் ஜெகதாம்பாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகதாம்பாள் அளித்த புகாரின் பேரில் ஆனந்தை போலீசார் கைது செய்தார்.
News November 7, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு 10 மணி முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 6, 2025
பேராவூரணி அருகே சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

பேராவூரணி அருகே சின்ன ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல் டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், வழியில் மீன் ஏற்றி வந்த மினி லாரி, சுந்தரவடி வேல் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


