News October 19, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
Similar News
News December 7, 2025
தஞ்சை: நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ

கனமழையால் பாதிக்கப்பட்ட சேதுபாவசத்திரம் தெற்கு ஒன்றியம் குருவிக்கரம்பை பகுதி மாசிலா கருப்பையின் இவர்களின் வீடு சேதமடைந்ததை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் நேரில் பார்வையிட்டு, நிதி உதவி வழங்கியும், புதிய வீடு கட்டும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கு.சின்னப்பா, இளைஞரணி அமைப்பாளர் வை.மதன், கிளை செயளாலர் மு.ஏகாம்பரம் உடனிருந்தனர்.
News December 7, 2025
தஞ்சாவூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

தஞ்சை மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<
News December 7, 2025
தஞ்சாவூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள்,<


