News November 19, 2025

தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

image

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.

Similar News

News January 17, 2026

தஞ்சை: கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

image

தமிழகத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜன.16) மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை நேற்று போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 481 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 17, 2026

தஞ்சை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

தஞ்சை: 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 44 காவல் நிலைய ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்ற காவல்துறை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!